சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில்
அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை துடியலூர் வெள்ளக்கிணறு என்ற பகுதியில் உள்ள தொழிலதிபர் மார்டின் இல்லம், மார்டின் குழும அலுவலகம் மற்றும் மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று இரண்டாவது நாளாக லாட்டரி மார்டினுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகிறது. இதே போல் கடந்த ஆண்டு அமலாக்கத்துறை செய்த சோதனையை அடுத்து மார்ட்டின் குழும நிறுவனங்களில் நடத்திய சோதனையில் 400 கோடி ரூபாய் வரையிலான சொத்துகள் முடக்கப்பட்டது குறிப்பிட தக்கது. கடந்த ஆண்டு நடைபெற்ற சோதனையில் கிடைத்த ஆவணக்களின் அடிப்படையில் தற்போது மீண்டும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது என்றும், இந்த சோதனையானது இன்றுடன் நிறைவடைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.