டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டவர்.
நாடாளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக ஜூன் 1 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் அளித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து அவர் பஞ்சாப், உத்தர பிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இடைத்தொடர்ந்து ஜூன் 2 ஆம் தேதி அவர் சிறைக்கு திரும்ப வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் அறிவித்திருந்தது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் ஆனது இன்னும் 3 நாட்களில் முடிவடையும் நிலையில் ஜாமீனை நீட்டிக்க கோரி சுப்ரீம் கோர்ட் அவசர மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில் 7 கிலோ வரை உடல் எடை குறைந்து விட்டதாகவும் உடலில் சர்க்கரை அளவு தொடர்பான கீடோன் அளவு அதிகரித்துக் கொண்டே இருப்பதால் உடல்நிலை மோசமாகிக் கொண்டிருக்கிறது என்றும் இதற்காக சிகிச்சை பெற வேண்டிய நிலை இருப்பதால் ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து கெஜ்ரிவாலின் ஜாமீனை நீட்டிக்க கூடிய மனுவானது சுப்ரீம் கோர்ட் கோடைகால நீதிபதி அவர்களின் நேற்று விசாரணைக்கு வந்தது. இடைத்தொடர்ந்து நீதிபதிகள் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளனர். மேலும் கெஜ்ரிவாலின் ஜாமீன் நீட்டிப்பு குறித்து தலைமை நீதிபதிகள் அமர்வு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.