இன்று முதல் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை துவங்குகிறார் முதல்வர் ஸ்டாலின் . திருச்சியில் சிறுகனூரில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துறை வைகோ மற்றும் பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு ஆகியோரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்யவுள்ளார் .
மேலும் நாளை திருவாரூரில் உள்ள கொரடாச்சேரியில் நடைபெறும் கூட்டத்தில் தஞ்சாவூர் மற்றும் நாகை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளார் . இன்று திருச்சியில் பிரச்சாரம் முடிந்த பின்பு தஞ்சை அல்லது திருச்சியில் முதல்வர் தங்குவதற்கு ஏதுவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன . மேலும் நாளை திருவாரூரில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின் .
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் இது தொடர்பாக சமூக வலைத்தளபக்கத்தில் “ மலைக்கோட்டை மாநகரில் எனது பரப்புரையைத் தொடங்குகிறேன். டெல்லி செங்கோட்டையை இண்டியா கூட்டணி பிடிப்பதில் , நிறைவடைய வேண்டும்” என பதிவிட்டுள்ளார் .