பிரதமர் நரேந்திர மோடி குஜராத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார் . இன்று பல நல திட்டங்களை திறந்து வைத்த இவர் பேசிய பொழுது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு , ஆங்கிலேயருக்கு கடும் நெருக்கடி கொடுத்த கோவிந்த் குருஜியின் நினைவு தினமான இன்று . மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் நாளை , இவர்கள் இருவருமே சுதந்திரத்திற்காக அவர்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர் . இந்த நிலையில் சந்திராயன் – 3 நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது . இது மிகவும் பாராட்டுக்குரியதாகும் இதற்காக பல நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பாராட்டுகள் குவிந்தன .
ஜி 20 மாநாட்டை எப்படி ஏற்பாடு செய்தோம் என்பதை பார்த்து உலகமே வியப்படைகிறது அதுமட்டுமின்றி தற்போது உள்ள நிலையில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து உலகமே விவாதிக்கிறது என்று கூறினார் …