பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று( 3 பிப்ரவரி 2025) -ல் அறிஞர் அண்ணாவின் 56 வது நினைவு நாளை ஒட்டி மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் இருந்து அமைதி பேரணி புறப்பட்டு பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அண்ணா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் கழக உயர்நிலை திட்ட செயல் உறுப்பினர் மூ கண்ணப்பன் பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீதி கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்தப் பேரணியில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.