அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக பதவியேற்கப் போவதாக அரசியல் வட்டாரம் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு முதலமைச்சரின் மு. க ஸ்டாலின் அமெரிக்கா செல்ல இருப்பதால் துணை முதலமைச்சர் பதவிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்கப் போவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து லோக்சபா தேர்தலில் அதிக ஈடுபாடு காட்டாத அமைச்சர்களின் இலாகாக்களை பறிக்கவும் திமுக ஆலோசித்து வருவதாகவும் வெளியான செய்தி அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சனாதனம் தொடர்பான வழக்குகள் உதயநிதி ஸ்டாலினுக்கு இருந்த காரணத்தினால் முதலமைச்சர் அமைதியாக இருந்ததாகவும் தற்பொழுது இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.