தமிழக வெற்றி கழகம் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி மாபெரும் மாநாட்டை நடத்தி முடித்துள்ளது. இதைத் தொடர்ந்து தலைவர் விஜய் சில தகவல்களையும் பகிர்ந்துள்ளார். அதன்படி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு கண்டிப்பாக ஆட்சியில் அதிகாரங்களும், பங்கும் அளிக்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநாட்டில் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளில் பல விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்து வந்தது.
மேலும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவரது அரசியல் எதிரி யார் என்ற அறிவிப்பையும் மாநாட்டில் வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
தனியார் வார இதழ் புத்தக வெளியீட்டு விழா வருகின்ற டிசம்பர் 6 ஆம் தேதி நடக்க உள்ளது. இதை தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமாவளவன் மற்றும் விஜய் ஆகியோர் ஒரே மேடையில் பகிரவுள்ள செய்தி திமுக அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.