நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பை வெளியிட்டார். அதை தொடர்ந்து கட்சியின் கொடி மற்றும் பாடல்களை அறிமுகம் செய்தார்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 27 – ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்திற்கான முதல் அரசியல் மாநாட்டையும் நடத்தி முடித்தார். மாபெரும் இந்த மாநாடு விமர்சையாக கொண்டாடப்பட்டது. சுமார் 8 லட்சம் மக்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
விஜயின் ரசிகர்கள் அவரின் புதிய அரசியல் பயணத்தை ஆதரிக்கும் வகையில் கொண்டாடி வருகின்றனர். சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தற்பொழுது அரசியலில் களம் இறங்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பல விமர்சனங்கள் இடம் பெற்று வருகிறது. நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட அவர்கள் சமீபத்தில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் நான் விஜய்யின் தீவிர ரசிகன் என்றும் அவரது கோட் திரைப்படத்தை குடும்பத்துடன் நான்கு முறை பார்த்ததாகவும் கூறியுள்ளார்.
அரசியலில் இருப்பதற்கு குறைந்த பட்சம் 20 ஆண்டுகால அனுபவம் வேண்டும் என்றும் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு குறைந்தது ரூ. 60 கோடி முதல் ரூ. 70 கோடி வரை செலவு செய்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.