இந்திய சினிமாவில் முக்கிய இடம் பிடித்துள்ள ரஷ்மிகா மந்தனா எண்ணற்ற மொழிகளில் நடித்துள்ளார். நேஷனல் கிராஸ் என்று மக்களால் கொண்டாடப்படும் வரும் நடிகை. ஆங்கில புத்தாண்டு அன்று எதிர்பாராத விதமாக ராஷ்மிகா மந்தனாவிற்கு காலில் அடிபட்டது. இதைத் தொடர்ந்து அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிக விரைவாக பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் விரைவில் குணமாகி வரவேண்டும் என்று கமெண்ட் செய்து வந்தனர்.

ஹிந்தியில் சாவா பட நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனா தாங்கியபடி நடந்து வந்தார். இதை தொடர்ந்து காலில் காயம் ஏற்பட்டாலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அந்தப் பட நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனா இந்த படத்துடன் சினிமாவில் ஓய்வு பெற்றாலும் சந்தோஷம் தான் என்று கூறியிருந்த செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.