இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி வயது 48 திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே சென்னை சிம்ஸ் மருத்துவ மனையில் ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை செய்துள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மஹால் படத்தில் நடிகராக அறிமுகமானவர் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி, மேலும் இவர் கடல் பூக்கள், சமுத்திரம், ஈரநிலம், அல்லி அர்ஜுனா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 1976 ஆம் ஆண்டு பாரதிராஜா சந்திரலீலா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் . சிறு வயதில் இருந்தே சினிமா துறையில் அதிக ஆர்வம் கொண்ட மனோஜ் பாரதி பள்ளி படிப்பை முடிக்கும் முன்பே அவரது தந்தையிடம் உதவி இயக்குனராக பணிபுரிய தொடங்கிவிட்டார். தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ஃப்ளோரிடா மாகாணத்தில் தியேட்டர் ஆர்ட்ஸ் படிப்பை முடித்துள்ளார்.
1999 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மஹால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியைப் பெற்ற நிலையில் மனோஜ் பாரதிக்கு நல்ல வரவேற்பையும் பெற்று தந்தது.
இவர் நடித்துள்ள சமுத்திரம் மற்றும் வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மனோஜ் பாரதி சமீபத்தில் சுசீந்திரன் தயாரிப்பில் மார்கழி திங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி உயிரிழந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.