Home » Blog » சீனாவில் மூளையை பாதிக்கும் புதிய வைரஸ்!!!

சீனாவில் மூளையை பாதிக்கும் புதிய வைரஸ்!!!

by Pramila
0 comment

தற்போது சீனாவில் மனிதர்களின் மூளையை பாதிக்கும் புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி இந்த வைரஸால் பாதிப்பு ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வெட்லேண்ட் வைரஸ் -WELV என்று அழைக்கப்படும் ஈர நில வைரஸ், மனித மூளையை பாதிக்கும் வைரஸ் என்றும், இவை ஒட்டுண்ணி பூச்சி கடிப்பதால், ஏற்படும் என்றும் ஆறிஞர்களால் கண்டறியப்பட்டுள்ளது.


இந்த வகையான வைரஸ், முதல் முறையாக 2019ல் ஜின் ஜோ நகரில் 61 வயது நோயாளி ஒருவருக்கு இருப்பதாக அடையாளம் காணப்பட்டது. இவரை, இவ்வைரஸால் பாதிக்கப்பட்ட ஒட்டுண்ணி பூச்சி கடித்ததால், ஐந்து நாட்கள தீவிர காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதிப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தான், வடக்கு சீனாவில் இது போன்ற பாதிப்பு ஏதேனும் இருக்கிறதா? என்று ஆராய்ச்சியாளர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையின் போது, பல்வேறு இடங்களில் 14,600 ஒட்டுண்ணிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 2% WELV வைரஸ் இருப்பதும், இவை முதன்மையான ஹீமாபிசஸிஸ் கன்சின்னா என்ற இனத்தை சேர்ந்தது என்றும் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த WELV ன் RNA ஆடு, குதிரைகள், பன்றிகள் போன்ற உயிரினங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஆராய்ச்சியாளர்கள் இப்பகுதியில் இருந்த 640 வனக்காவலர்களிடமிருந்து இரத்த மாதிரிகளை பெற்று இந்த நோய்க்கான எதிர்ப்பு சக்தி குறித்து கண்டறிய ஆய்வுக்கு உட்படுத்தியதில், 12 பேருக்கு இந்த வைரஸ் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் ஒரு நோயாளி மட்டும் மூளை மற்றும் முதுகெலும்பு திரவத்தில் உள்ள அதிக வெள்ளை இரத்த அணுகளின் எண்ணிக்கை காராணமாக சுயநினைவை இழந்து கோமாவிற்கு தள்ளப்பட்டார். மேலும் எலிகள் மீது இந்த ஆய்வு நடத்திய போது WELV வைரஸ் தொற்றானது நரம்பு மண்டலத்தை பாதிப்பதாகவும், முக்கியமாக மூளை சம்பந்தப்பட்ட கடுமையான உடல்நலப்பிரச்னைகளை ஏற்படுத்த சாத்தியம் இருக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.