Home » Blog » தட்டிக்கேட்ட ஆசிரியரை பாராட்டுகிறேன்; மகா விஷ்ணு செய்த தவறுக்கு தண்டனை உறுதி – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

தட்டிக்கேட்ட ஆசிரியரை பாராட்டுகிறேன்; மகா விஷ்ணு செய்த தவறுக்கு தண்டனை உறுதி – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

by Pramila
0 comment

சென்னை அசோக் நகர் பகுதியில் இயங்கி வரும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்மஸ்ரீ மகா விஷ்ணு என்பவர் மோட்டிவேஷன் என்ற பெயரில் பிற்போக்குத்தனங்களை விதைக்கும் வகையில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்த சர்ச்சையை குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின், எம்பி ஜோதிமணி, கார்த்திக் சிதம்பரம், மாணவர் அமைப்பினர் என்று பலத்தரப்பினர் தங்களின் எதிர்ப்புக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளியில் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்த சர்ச்சை குறித்து எடுக்கப்படும் நடவடிக்கை தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து அந்த பள்ளியில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளியில் ஏன் என்ற கேள்வியை எழுப்ப வேண்டும். இல்லை என்றால்.. ஆசிரியரே கேள்வி கேட்கவில்லை என்று மாணவர்கள் நினைக்கும் சூழலில், படிக்கும் பிள்ளைகளுக்குத்தான் பெரிய பிரச்னை ஏற்படும்.. ஆகவேதான்..’பிற்போக்கு சிந்தனையை எதற்கு விதைக்கிறீர்கள் .இது எவ்வாறு சாத்தியப்படும்.’ என்று கேட்ட ஆசிரியரான சங்கர் அவர்களை நான் பாராட்டுகிறேன். இவர் தமிழ் வாத்தியார். இதுப்போன்ற பிற்போக்குதனத்தில் இருந்து அன்றிலிருந்தே நம்மை பாதுகாப்பது தமிழ் மொழிதான், தாய் மொழி எவ்வளவு அவசியமானது என்பதை உணர்ந்து தான் இதை கூறுகிறேன்.

Anbil Mahesh praising school teacher Shankar.

மாணவர்கள் நன்றாக கல்வி கற்க வேண்டும். அன்பில் மகேஸாகிய நான் பேசுகிறேன் என்பதற்காக ,..நான் சொல்வது அனைத்தும் சரி என்று எடுத்துக்கொள்ள கூடாது. நான் சொல்வது சரிதானா? இல்லையா? என பகுத்தறிந்து நீங்கள் கருத்தை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். இதைதான் தந்தை பெரியாரும் கூறுகிறார். நீங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்லும் போது பகுத்தறிவாக சிந்தித்து செயல்பட வேண்டும். இங்கு அனைவரும் சமம், ஏற்றத்தாழ்வு எதுவும் கிடையாது, கல்வி ஒன்று மட்டுமே ஒருவரிடமிருந்து திருட முடியாத சொத்து. புயல், வெள்ளம், தீ என கல்விச்சான்றிதழ்கள் அழிந்தாலும், நீங்கள் கற்றக் கல்வியானது ஒருநாளும் உங்களை விட்டு செல்லாது. அதை திருடவும் முடியாது.

நம்மை சுயமாக சிந்திக்க வைப்பது கல்விதான் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார். முதலமைச்சரும், அறிவியல் அறிவே சிறந்தது மற்றும் முன்னேற்றத்திற்கான அறிவு என்று தெரிவித்திருக்கிறார் என்றால் இதுவே திராவிட மாடல் அரசின் முக்கியமான இலக்கு. தவறுகள் யார் செய்தாலும், தண்டனை கண்டிப்பாக உண்டு.

எப்படிப்பட்ட தண்டனை என்பதை உறுதி செய்வது அமைச்சராகிய என்னுடைய கடமை. அதிகப்படியான மதிப்பெண் பெற்றால் மட்டும் புத்திசாலிக்கிடையாது, யார் என்ன கருத்து கூறுகிறார்கள் என்பதை உணர்ந்து, மாணவச் செல்வங்களாகிய நீங்கள் பகுத்தறிந்து பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்..” என்று தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.