Home » Blog » நடிகை கஸ்தூரி ஜாமீன் விவகாரத்தை நீதிமன்றங்கள் கருணையோடு அணுக வேண்டும் என நீதிபதி சுவாமிநாதன் மனைவி கோரிக்கை

நடிகை கஸ்தூரி ஜாமீன் விவகாரத்தை நீதிமன்றங்கள் கருணையோடு அணுக வேண்டும் என நீதிபதி சுவாமிநாதன் மனைவி கோரிக்கை

by Pramila
0 comment

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி சுவாமிநாதன். இவரது மனைவி திருமதி காமாட்சி ஸ்வாமிநாதன், சக்ஷம் என்றழைக்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். திருமதி காமாட்சி ஸ்வாமிநாதன் தற்போது நடிகை கஸ்தூரியின் குழந்தைக்காக பொது வெளியில் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

நடிகை கஸ்தூரிக்கு எதிராக தொடரப்பட்டுள்ள குற்றவியல் வழக்கு குறித்து நான் கருத்து கூறுவது முறையான ஒன்றல்ல ஆனால் நடிகை கஸ்தூரிக்கு ஆட்டிசம் பாதிப்போடு ஒரு மகன் இருப்பதை அறிந்தேன் அந்த மகனை கஸ்தூரி தனி ஒரு நபராக போராடி வளர்த்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது.

இந்த பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் தினசரி வாழ்க்கை என்பதே ஒரு மாபெரும் சவால் தான். நானும் கஸ்தூரியைப் போல ஒரு சிறப்பு குழந்தையின் அம்மாதான். எனக்கும் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மகன் இருக்கிறான். எனக்கும் என்னைப் போன்ற ஏனைய தாய்மார்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கத் தோன்றுகிறது. எனவே ஜாமீன் விஷயத்தில் நீதிமன்றங்கள் குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு அணுக வேண்டுமென எதிர்பார்க்கிறோம். ஒரு மாற்றுத் திறனாளி குழந்தையின் தாயாக கஸ்தூரிக்கு உடன் நிற்பதை என் தார்மீக கடமையாக நினைத்து இதை நான் பதிவிடுகிறேன் என்று காமாட்சி ஸ்வாமிநாதன் தெரிவித்துள்ளார்

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.