Home » Blog » புகார் கொடுத்த மனிதநேய மக்கள் கட்சி?? 4 பிரிவுகளின் கீழ் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

புகார் கொடுத்த மனிதநேய மக்கள் கட்சி?? 4 பிரிவுகளின் கீழ் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

by Pramila
0 comment

இந்த மாதம் உலகமெங்கும் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கும் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் அமரன். இந்த திரைப்படம் வெளியாகிய முதல் நாளில் இருந்தே பல்வேறு எதிர்ப்புகள் வந்தது, குறிப்பாக காஷ்மீரில் வாழும் இஸ்லாமியர்களை இந்த கதையில் தவறாக சித்தரித்துள்ளதாக கூறி பல்வேறு சர்ச்சைகளும் பல அரசியல் தலைவர்களிடமிருந்து எதிர்ப்புகளும் வந்தது.  

இந்நிலையில் இந்த மாதம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா,  திரு. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் தீபாவளி பண்டிகையையின் போது வெளியான ‘அமரன்’ படம் வெறுப்பின் விதைப்பு.  இந்த திரைப்படத்தின் மூலம் வரலாற்றை திரித்துள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். ஜவாஹிருல்லாவின் இந்தக் கருத்துக்கு தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா கடுமையான எதிர்ப்பைத் பதிவு செய்தார்.  

இந்த சர்ச்சை குறித்து முன்னதாக சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த எச்.ராஜா கூறுகையில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் தேசத்துரோகிகள் என்றும் இவர்களை போன்றவர்களை அரசு கண்காணிப்பில் வைக்க வேண்டும். அமரன் திரைப்படத்தை எதிர்ப்பதாக கூறி, தேச துரோகத்தை பரப்புவதாக இருந்தால், நம் நாட்டை நேசிப்பவர்கள் இவர்களுக்கு எதிராக இருக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா மீது மனிதநேய மக்கள் கட்சி சார்பில் காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் மீது அவதூறு பரப்பும் வகையில் தேச துரோகி என்று பேசிய எச்.ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எச்.ராஜா தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களிடையே ஒற்றுமையை குலைக்கும் விதமாக பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

இதனை தொடர்ந்து சென்னை விமான நிலைய காவல்துறை எச். ராஜா மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  1) BNS 192- கலவரத்தை உண்டாக்கும் பேச்சு, 2) BNS 196 – மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை வளர்த்து, நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான செயல்களைச் செய்தல், 3) BNS 353 – அவதூறு பரப்புதல், 4) BNS 353 (2) – மதம், இனம் ஆகியவற்றின் அடிப்படையில் மின்னணு வழிமுறைகள் உட்பட, தவறான தகவல், வதந்தி அல்லது ஆபத்தான செய்திகளைக் கொண்ட அறிக்கை அல்லது அறிக்கையை வெளியிடுதல், பரப்புதல் போன்ற  நான்கு பிரிவுகளின் கீழ் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் சமூக வலைத்தளங்களில் இந்த சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.