இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானுவின் தரப்பு நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக சாய்ரா பானு தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.ஆர். ரகுமான் மற்றும் சாய்ரா பானு இடையே 1995 ஜனவரி 6 ஆம் தேதியன்று திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கதிஜா மற்றும் ரஹீமா என 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர். இருவரும் பல நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல்களுக்கு ஜோடியாக கலந்துகொண்டுள்ளனர் அதுமட்டுமின்றி சினிமா வட்டாரங்களில் சிறந்த ஜோடியாகவும் திகழ்ந்துள்ளனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத திருப்பமாக சாயிரா பானு தனது வழக்கறிஞர் மூலம் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டது நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சாய்ரா பானுவின் அறிக்கையில், திருமணமாகி பல வருடங்கள் கழித்து, தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரிந்து செல்லும் கடினமான முடிவை நான் எடுத்துள்ளேன். இருவருக்குமிடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவானது தங்கள் உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சில உணர்ச்சிபூர்வமான அழுத்தத்திற்குப் பிறகு ஏற்பட்டது. மிகுந்த வலி மற்றும் வேதனையில்தான் இந்த முடிவை தான் எடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஏ.ஆர். ரகுமான் வெளியிட்டுள்ள பதிவில், நாங்கள் எங்களது திருமண வாழ்வு முப்பது வயதை எட்டும் என்று நம்பினோம், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவை நோக்கி நகர்ந்துவிட்டது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும். இந்த சிதைவுகள் மீண்டும் எங்களின், இடத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், அதற்கான அர்த்தத்தை நாங்கள் தேடுகிறோம். இந்த பலவீனமான அத்தியாயத்தை நாங்கள் கடந்து செல்லும்போது எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளித்த எங்களின் நண்பர்களுக்கு நன்றி.
மேலும் இந்த தருணத்தில் எங்களது தனியுரிமைக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று அவர்களது மகன் அமீன் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.