Home » Blog » வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பரிசுப் பொருட்களை பதுக்கி வைத்திருந்தால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு…!

வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பரிசுப் பொருட்களை பதுக்கி வைத்திருந்தால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு…!

by Pramila
0 comment

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பரிசுப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் தற்போது அறிவித்துள்ளனர் . இது 24 மணி நேரமும் செயல்படுவதற்கான கட்டுப்பாட்டு அறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன .

மத்திய அரசின் பத்திரிக்கை தகவல் மையம் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் : வாக்காளர்களுக்கு பணம் , மதுபானம் , போதைப்பொருட்கள் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க தீவிர சோதனைகளை மேற்கொள்ளும் பணியை மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனைத்து மாவட்டங்களையும் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது .

தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக பணம் , பரிசு பொருட்கள் வைக்கப்பட்டிருந்தால் 044-24360140 என்ற தமிழ்நாடு கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி எண்ணிலும் , loksabhaeleche-2024@gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம் .

புதுச்சேரியில் சட்ட விரோதமாக பணம் பரிசுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தால் 0413-2221999 என்ற தொலைபேசி எண்ணிலும் , helppycgst@gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம் .

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.