பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக தமிழகம் வருகிறார். இதைத் தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று இரவு நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை மேற்கொண்டு வந்தார். இதன் நிறைவு விழாவாக திருப்பூரில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கு பெறுவதற்காக தமிழகம் வந்தடைந்துள்ளார். இன்று நடைபெறும் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நிறைவு நிகழ்ச்சி முடிந்த பிறகு மதுரை செல்வதாக தகவல் கிடைத்துள்ளது.
என் மண் என் மக்கள் பாத யாத்திரை நிறைவு நிகழ்ச்சி திருப்பூர் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி பல்லடம் மாதப்பூரில் நடைபெறுகிறது. மேலும் இரண்டு நாட்கள் பிரதம நரேந்திர மோடி தமிழகத்தில் உள்ள மற்ற கோவில்களிலும் சிறப்பு தரிசனம் மேற்கொள்ளுவார் என்று தகவல் கிடைத்துள்ளது.