தென்மேற்கு வங்க கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு , காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் . மேலும் புதுக்கோட்டை , ராமநாதபுரம் , சிவகங்கை , தூத்துக்குடி , திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது .
டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை , திண்டுக்கல் , தேனி , மதுரை , சிவகங்கை , ராமநாதபுரம் , விருதுநகர் , தென்காசி , திருநெல்வேலி , கன்னியாகுமரி , தூத்துக்குடி , மாவட்டங்களில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது .
சென்னையை பொருத்தவரையில் அடுத்து 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு அறிக்கையில் தெரிவித்திருந்தது .