வரும்10ம் தேதி முதல் 27ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
அக்டோபர் மாதம் தமிழகத்தில் கிட்டத்தட்ட 44.5 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்தது .பொதுவாக அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களில் 44 சென்டிமீட்டர் மழை பதிவாக வேண்டும்.பருவ மழை காலத்திற்கு முன்பாகவே மழையின் அளவு அதிகமாக இருக்கிறது.
இதற்கு மேல் பெய்யக்கூடிய மழை இயல்பாக பெய்யக்கூடிய மழையின் அளவைவிட அதிகமாகவே கணக்கிடப்படும்.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையிலும் அதன் தாக்கத்தினால் 50 சென்டிமீட்டர் அளவுக்கு அதி கனமழை பெய்துள்ளது.
சென்னை போன்ற பகுதிகளில் டிசம்பர் மாதத்தில் மழைப்பொழிவு குறைய தொடங்கும் ஆனால் இப்போது மழைப்பொழிவு தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிற 10-ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.செப்டம்பர் மாதங்களில் உருவாகக்கூடிய சூறாவளி புயல் அக்டோபர் மாதம் தாமதமாக உருவானதனால் நவம்பர் மாதத்தில் பசுபிக் பெருங்கடல் அதிகமான சூறாவளி புயல் உருவாக்கி உள்ளது. இதனை அடுத்து டிசம்பர் மாதத்திலும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதனால், டிசம்பரிலும் மழை பொழிவை உருவாக்கும் என்று தனியார் வானிலை ஆய்வு மைய அதிகாரி டெல்டா ஹேமச்சந்திரன் கூறுகிறார்.