விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளடக்கிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று தமிழகத்தில் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்,செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது இதை அடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.