மற்ற மாதங்களில் பெய்த மழையின் அளவைவிட டிசம்பரில் மிகவும் அதிக மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் எதிரொலி
கடந்த அக்டோபர் மாதம் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக உருமாறியது.
டிசம்பர் மாதம் அதிகனமழைக்கு வாய்ப்பு
இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக அதிக கன மழை பொழிந்து வரும் நிலையில் டிசம்பர் மாதத்திற்கான மழையின் நிலவரம் எப்படி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா,புதுச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மழையின் அளவானது எப்பொழுதும் இருக்கும் அளவைவிட சற்று அதிகமாக இருக்கும் எனவும்,டிசம்பர் மாதம் 31% அதிக மழைபொழியும் எனவும் அறிவித்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் இயல்பை விட 75 % அதிகமாக மழை பொழிய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.