நடிகர் தனுஷ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர் . இவர் ‘துள்ளுவதோ இளமை’என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர். ஆடுகளம் மற்றும் அசுரன் பாடத்திற்கு சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் . தற்போது நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் . தனது 50 வது படத்தை கதாநாயகனாக நடித்து அவரை இயக்கி வருகிறார். இப்படத்தில் துஷாரா , எஸ்.ஜே.சூர்யா , சந்தீப் கிஷன் , விஜயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர் . மேலும் இப்படமானது இறுதி கட்டத்தில் உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது . சமீபத்தில் இவர் நடித்த “வாத்தி” திரைப்படம் தமிழ் , தெலுங்கு மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது .
இவரது ஐம்பதாவது திரைப்படத்தை முடித்துவிட்டு தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா டைரக்டு செய்யும் படத்தில் நடிக்க இருப்பதாகவும் , இதில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் . மேலும் இப்படத்தை பான் இந்தியா படமாக எடுக்க உள்ளனர். எனவே இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது .
தனது 51 வது படத்துக்கு தயாராகும் நடிகர் தனிஷ்…!
தற்போது நடிகர் தனுஷ் தனது 50 படத்தில் தானே இயக்கி நடித்து வருகிறார் .
previous post