விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் மூன்றாவது சீசனில் பங்கு பெற்ற மாடலிங் அபிராமி வெங்கடாசலம். இவர் முதலில் மாடலிங் துறையில் பிரபலமானார். பின்பு சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். இவர் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே கவனத்தை பெற்றார்.
விஜய் டிவியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட இவர் சில காதல் சர்ச்சையில் சிக்கினார். அதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டார்.
பிக்பாஸிற்கு பிறகு சொல்லும் அளவிற்கு அபிராமி வெங்கடாஜலத்திற்கு சினிமாவில் பெரிய வாய்ப்புகள் ஏதும் வரவில்லை, இதை தொடர்ந்து தற்பொழுது சின்ன திரையில் வாய்ப்பு வந்திருப்பதாகவும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வீரா தொடரில் நடிகை அபிராமிக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளி திரையிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.