இந்தியாவில் உலக அழகி என்றாலே நினைவுக்கு வருவது ஐஸ்வர்யா ராய் தான் இவர் தமிழ் சினிமாவில் எண்ணற்ற வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். ஜீன்ஸ், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் போன்ற பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். சினிமா உலகில் சிறந்த ஜோடியாக வலம் வரும் இவர்கள் சமீப நாட்களாக இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக சில செய்திகள் பரவி வருகிறது.
மேலும் சமீபத்தில் அம்பானி மகன் திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் தனியாக வந்ததாகவும் அபிஷேக் பச்சன் தனியாக வந்துள்ளதாகவும் சில தகவல்களும் வெளியாகி வருகிறது. இதைத்தொடர்ந்து இவர்கள் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் சில நிகழ்வுகளை வைத்து உறுதி செய்து பேசப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து அபிஷேக் பச்சன் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் பாரிஸ் – யில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை காணச் சென்ற அவர் பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் தனது திருமண மோதிரத்தை காண்பித்து நாங்கள் இருவரும் திருமண வாழ்க்கையை சந்தோஷமாக தான் இருக்கிறோம் என்று பேட்டியளித்துள்ளார். இதைத்தொடர்ந்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த பேட்டி அமைந்துள்ளது