நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரின் இவரும் ஒருவர், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். பொன்னியின் செல்வன் படம் மூலமாக இவர் நடிப்பு திறமை தமிழ் சினிமாவில் உச்சத்தை பெற்றுள்ளது. கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமா நட்சத்திரங்களை விவாகரத்து செய்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர். தனுஷ், ஜி.வி. பிரகாஷ், இவர்களை தொடர்ந்து தற்பொழுது ஜெயம் ரவி அவரது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் பரவி வருகிறது.
ஜெயம் படத்தில் மூலம் அறிமுகமான ரவி மக்களிடையே பெரும் வரவேற்பையும், அன்பையும் பெற்று வருகிறார். ஆக்ஷன் ஹீரோவாகவும், ரொமான்டிக் ஹீரோவாகவும் ரசிகர்கள் மத்தியில் இடம் பெற்றுள்ளார்.
ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இதனிடையே இவர்களது திருமண வாழ்க்கை மிக அன்யோன்யமாக சென்று கொண்டு இருந்த நிலையில் தற்பொழுது 21 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் விவாகரத்து என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இதனிடையே ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி அவரது instagram – யில் ஜெயம் ரவியின் புகைப்படங்களை நீக்கி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.