Home » Blog » திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அஜித் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அஜித் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

by Pramila
0 comment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார்.  தல என்று அழைக்கப்படும் அஜீத் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் நடிகர்,  இவர் தற்பொழுது விடா முயற்சி படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார்.  இதைத்தொடர்ந்து ஏகே 63 ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 

இந்நிலையில் தற்பொழுது நடிகர் அஜித் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த தகவலால் அஜித்  ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட உடல் நல கோளாறு காரணமாகவே நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் பரவி வந்த நிலையில் நடிகர் அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்தரா சில தகவல்களை வெளியிட்டுள்ளார் அதில் நடிகர் அஜித் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். 

மேலும் நடிகர் அஜித் படப்பிடிப்புக்காக வெளிநாட்டிற்கு செல்ல இருக்கும் நிலையில் இது போன்ற மருத்துவ பரிசோதனை செய்வது வழக்கம் என்றும் அதற்காக மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் நடிகர் அஜித்தின் மேனேஜர் கூறியுள்ளார்.  

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.