பிரபல முன்னணி நடிகரான மோகன் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார் இவர் நடிப்பது மட்டுமில்லாமல் பல படங்களில் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பை ரசிப்பதை விட இவருடைய பாடலுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இதன் காரணமாக இவருக்கு மைக் மோகன் என்று செல்ல பெயரும் வந்தது.
இவன் நடித்துள்ள படங்கள் ஒவ்வொன்றுமே ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது “மன்றம் வந்து தென்றலுக்கு மஞ்சள் வர நெஞ்சம் இல்லையோ” என்ற பாடலை கேட்டாலே இவருடைய ஞாபகம் தான் அனைவருக்கும் வரும்.
இதைத்தொடர்ந்து சில காலங்களாகவே இவர் நடிப்பிலிருந்து ஒரு பெரிய இடைவேளை ஏற்பட்டு விட்டது. தற்பொழுது இவர் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹரா என்ற படத்தில் நடித்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருடன் பிக் பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமாரும் உடன் நடிப்பதாக தகவல் வெளியாகி இருப்பது உடன் புகைப்படமும் மிக வைரலாக பகிரப்பட்டு வருகிறது.