Home » Blog » நடிகர் சிவராஜ்குமார்க்கு என்ன நோய்? அமெரிக்கா சென்றதன் காரணம் என்ன!…

நடிகர் சிவராஜ்குமார்க்கு என்ன நோய்? அமெரிக்கா சென்றதன் காரணம் என்ன!…

by Pramila
0 comment

புனீத் ராச்குமார் (17 மார்ச் 1975 ) இந்தியத் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார். பெரும்பாலும் கன்னடத் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ராஜ்குமார் – பார்வதம்மா இணையரின் இளைய மகன் ஆவார்.

பெரும்பாலும் கன்னடத் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார்.

இவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது திடீர் மாரடைப்பு காரணமாக சரிந்து விழுந்தார், மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி (29 அக்டோபர் 2021) அன்று உயிரிழந்தார்.

ராஜ்குமார் தனது 46 வயதிலேயே மாரடைப்பு காரணமாக காலமானார். இவருடைய மரணம் கன்னட ரசிகர்களை மிகவும் பாதித்து உள்ளது.

பழம்பெரும் கனடா நடிகர் டாக்டர் ராஜ்குமாரின் மூத்த மகன் சிவராஜ் குமார்.

62 வயதாகும் இவர், சென்னையில் பிறந்து வளர்த்தவர். அதே போல் சென்னையில் உள்ள எம்ஜிஆர் கவர்மெண்ட் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ட்ரைனிங் இன்ஸ்டியூட்டில் சினிமா சம்பந்தமான படிப்பை படித்துவிட்டு, பின்னர் தெலுங்கு திரையுலகில் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கினார்.

1974 ஆம் ஆண்டு, ‘ஸ்ரீ சீனிவாச கல்யாணம்’ என்கிற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர்.

1986 ஆம் ஆண்டு ‘ஆனந்த்’ என்கிற கன்னட திரைப்படத்தில் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார்.  முதல் திரைப்படத்திற்கே சிறந்த அறிமுக நாயகனுக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதை வென்றார் சிவ ராஜ்குமார்.

ஜெயிலர் திரைப்படத்தில், ரஜினிகாந்தின் நண்பராக நரசிம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.

தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பாடகராகவும் பிரபலமான இவர் 20க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.

சிவ ராஜ்குமாருக்கு தற்போது புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகவும், இதற்காக அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி  ரசிகர் பெருமக்களிடையே பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

சிவ ராஜ்குமார் தனக்கு ஒரு நோய் இருப்பது உண்மைதான். அதற்காக அமெரிக்கா சென்று ஒரு மாதம் சிகிச்சை எடுக்க உள்ளதும் உண்மைதான். ஆனால் அது புற்றுநோய் அல்ல. அந்த நோய் குறித்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் ரசிகர்கள் யாரும் பதட்டம் அடைய வேண்டாம். நான் நலமுடன் இந்தியா திரும்புவேன் என தெரிவித்தார்.

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதால் தான் கமிட் ஆன படங்களிலிருந்து வெளியேறி விட்டதாக ஒரு அறிவிப்பும், இதை தொடர்ந்து சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது போன்ற பேச்சுக்களும் வலைபேச்சுக்களில், வலம் வரும் நிலையில் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.