நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அவரது அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்த நிலையில் அதற்கான வேலைகளையும் செய்து வருகிறார். தற்பொழுது நடிகர் விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படம் நடித்து வருவதாகவும் இதை தொடர்ந்து மற்றொரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். இந்த இரண்டும் படங்களை முடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகப் போவதாகவும் முழுவதும் அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் சென்னை கொரட்டூரில் சுமார் 15 கிரவுண்ட் இடத்தில் புதிதாக சாய்பாபா கோயில் கட்டி அதற்கான கும்பாபிஷேகத்தையும் நடத்தி முடித்துள்ளார். இந்த கோயில் கும்பாபிஷேகத்தில் பெரிதாக சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளாத நிலையில் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா மற்றும் தந்தை சந்திரசேகர் இவர்களுடன் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி கலந்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
நடிகர் விஜயின் தாயார் ஷோபா சாய் பாபாவின் தீவிர பக்தர் என்பதால் தன் தாயாருக்காக நடிகர் விஜய் சாய்பாபா கோயிலை கட்டிக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.