நடிகர் விஜய் கடந்த சில மாதங்களாகவே மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார் இதை தொடர்ந்து நடிகர் விஜய்க்கு அரசியல் வர ஆர்வம் இருப்பதாக மக்களிடையே ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டது இதை தொடர்ந்து தற்பொழுது நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்று கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக நடிகர் விஜய் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் தொடர்ந்து நடிகர் விஷாலும் கட்சியை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட இருப்பதாகவும் கட்சியை தொடங்க இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அரசியலில் ஆர்வம் காட்டி வரும் நடிகர் விஷால் சென்னை ஆர்.கே நகர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது மேலும் நடிகர் விஷால் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்த செய்தி நடிகர் விஷாலின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் நடிகர் விஷாலின் கட்சியின் பெயர் விஷால் மக்கள் நல இயக்கம் என முடிவு செய்திருப்பதாகவும் அதற்காக மாவட்டம் முழுவதும் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஷால் படப்படிப்புக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் குறைகளை கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறார். மேலும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை நடிகர் விஷால் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.