தமிழ்,மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை நளினி.இவர் சின்னத்திரை நடிகையாக வலம் வருகிறார். முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை நளினி . நடிகை நளினி தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இனிய திருமணம் செய்திருந்தாலும் அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் .நடிகை நளினி அண்மையில் அழைத்துள்ள பேட்டியில் பல விஷயங்களை அவர் கூறியுள்ளார்.
இதில் நடிகை நளினி கூறியதில் நானும் ராமராஜனும் பல படங்களில் நடித்த போது காதலித்து வந்தோம். நாங்கள் காதல் செய்வது எங்கள் குடும்பத்திற்கு தெரிந்து விட்டதால், அவருடன் சேர்ந்து நடிப்பதை நிறுத்திவிட்டேன், ஆனால் அவர் எனது உதவியாளருக்கு காசு கொடுத்து லவ் லெட்டர் கொடுத்து அனுப்புவார். அதை நான் ரகசியமாக எடுத்து சென்று படித்து வருவேன். அதுமட்டுமின்றி இன்னும் அந்த கடிதம் அனைத்தையும் நான் பத்திரமாக வைத்துள்ளேன். அது மட்டும் இன்றி நான் ஒரு மலையாள படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் பொழுது புடவை மாற்றுவதாக சொல்லிவிட்டு நான் காரில் ஏறி சென்று விட்டேன்.
பிறகு திருமணம் முடிந்த பின் எங்கு செல்வது என்று தெரியாமல் நாங்கள் ஊர் ஊராக சென்று அடைந்தோம். அப்போதுதான் எம்ஜிஆர் அவர்கள் திருமண விஷயத்தில் தலையிட்டு பேசி இந்த பிரச்சனையை தீர்த்து வைத்தார். பின்பு எனக்கும் ராமராஜன் சில கருத்து வேறுபாடு காரணமாக 2000ம் ஆண்டு பிரிந்துவிட்டோம். ஆனால் நாங்கள் பிரிந்து உள்ளோமே தவிர இன்னும் நான் அவரை காதலித்து வருகிறேன். இது அவருக்கும் தெரியும் என்று வெட்கப்பட கூறினால் நடிகை நளினி.
இந்த பேட்டியின் பொழுது நடிகை நளினியிடம் புடவை கலெக்ஷன் பற்றி கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில்: புடவை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் இதனால் எப்போதுமே புது புது புடவைகள் வாங்கி வைத்துக் கொள்வேன். இது பழக்கமாகிவிட்டது 365 நாளும் எனக்கு புது புடவை கட்ட வேண்டும். இந்த புது புடவைக்காகவே ஒரு வீடு தனியாக வாங்கி வைத்துள்ளேன் .ஒரு புடவையை கட்டி விட்டு அந்த வீட்டில் போட்டு பூட்டி விடுவேன் என்று கூறியுள்ளார். நடிகை நளினியின் பேட்டியை பார்த்த பலர் என்னது புடவைக்கு ஒரு தனி வீடா என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.