தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நடிகை தமன்னா இதுவரை 75க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை தமன்னா கடந்த 2005 ஆம் ஆண்டு அவரது திரைப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். அதை தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகப் பிரபலமான காவாலா என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து தற்பொழுது அச்சோ அச்சோ அச்சச்சோ என்ற பாடல் மூலம் ரசிகர்களுக்கு புது உற்சாகத்தை கொடுத்துள்ளார்.
சுந்தர். சி இயக்கத்தில் அரண்மனை 4 சமீபத்தில் திரையரங்கில் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து இந்த படம் தமிழகத்தில் ரூ. 70 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மேலும் ரஜினியுடன் நடித்த ஜெய்லர் திரைப்படத்திற்கு பிறகு நடிகை தமன்னா சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 30 % அரண்மனை 4 – யில் சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ரூ. 4 முதல் 5 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.