Home சினிமா வில்லியாக நடிக்கும் ஆலியா பட் – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

வில்லியாக நடிக்கும் ஆலியா பட் – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

by Pramila
0 comment

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆலியா பட். நடிகை ஆலியா பட் ஹிந்தி சினிமாவில் பல ஹிட்  படங்கள் கொடுத்துள்ளார். சமீபத்தில் நடிகை ஆலியா பட் நடிப்பில் வெளிவந்த Rocky Aur Rani Ki Prem Kahani என்ற படம்  ரிலீஸ் ஆன நிலையில்  இவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து நல்ல வெற்றி பெற்றது. 

தற்போது நடிகை ஆலியா பட் ஹாலிவுட் தற்போது களமிறங்கியுள்ளார். அவர் நடிக்கின்ற Netflix தயாரிக்கும் Heart of Stone  என்ற படத்தில் நடித்து வருகிறார்.அந்தப் படத்தில் Jamie Dornan,Gal Gadot  போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தில் நடிகை ஆலியா பட் வில்லியாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதைப் பற்றி நடிகை ஆலியா பட் கூறுகையில் ஹாலிவுட் படத்தில் நடிக்க தொடங்கிய பொழுது ஆங்கிலத்தில் பேசுவது முதலில் ஒரு மாதிரியாக இருந்தது. நான் அந்த அளவுக்கு ஆங்கிலத்தில் பேசி நடித்ததில்லை. நான் ஹிந்தியில் பேசி நடித்து பழகிவிட்டேன். மற்ற நேரங்களில் ஆங்கிலத்தில் அதிகம் பேசினாலும் நடிக்கும் பொழுது முதல் முதலாக ஆங்கிலம் பேசுவது முதல் கஷ்டமாக இருந்தது. ஆனால் அதுவும் ஐந்து நிமிடத்தில் பழகிவிட்டது என்று ஆலிவர் கூறினார்.

 

You may also like

Leave a Comment

@2021 – All Right Reserved. Designed and Developed by PenciDesign