அமலா ஷாஜி இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவார். இவரின் ரீல்ஸ் வீடியோக்கள் கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாடு ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. பிரபலமான நடிகைகளின் கதாபாத்திரம் போல் ரீல்ஸ் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் அமலா ஷாஜிக்கு இன்ஸ்டாகிராம் தளத்தில் மில்லியன் கணக்கில் ரசிகர்களை கொண்டு உள்ளார்.
ட்ரெண்டாகி வரும் அமலா ஷாஜி தற்பொழுது படங்களில் கமிட் ஆகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து அமலா ஷாஜி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு குவிந்த வண்ணம் உள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைத்தளங்களில் அதிக ஃபாலோவர்களை கொண்டுள்ளதால் அதன் மூலமாகவும் லட்சக்கணக்கில் அமலா ஷாஜி சம்பாதித்து வருகிறார்.
குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் பல மடங்காக அதிகரித்து தருவதாக கூறி அமலா ஷாஜி பண மோசடியில் ஈடுபட்டதாக இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து ரவி ஐபிஎஸ் அமலா ஷாஜி பண மோசடி குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவுகிறது.