சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். மேலும் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிப்பில் இப்படம் உருவானது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் இத்திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். உலகம் முழுவதும் முதல் நாள் வசூலாக 42 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் இது வரை நடித்த திரைப்படங்களில் இந்த திரைப்படம் அவருக்கு பெரிய வெற்றியை தேடித் தந்துள்ளதாக அமைந்துள்ளது.
அமரன் திரைப்படம் ஒரு உண்மை கதை ராணுவ வீரர் முகுந்தன் வாழ்க்கையை படமாக எடுக்கப்பட்டது திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் நடிகர் சூப்பர் ஸ்டார் மற்றும் பிரபல நட்சத்திரங்கள் அமரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் மற்றும் இயக்குனர்களை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர்.
அமரன் திரைப்படம் வெளியாகி 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அமரன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது. இன்னும் வருகின்ற நாட்களில் அமரன் திரைப்படம் மேலும் வசூல் வேட்டை செய்யும் என்று பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.