நடிகை பாவனி விஜய் டிவியில் சின்னத்திரை நடிகையாக இருந்து வருகிறார். இவர் சின்னதம்பி என்ற சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானார். அதற்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் இவருக்கு இணையான போட்டியாளராக அமீர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது இந்த காதலானது பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியில் வந்த பிறகும் இருவரும் மிக நெருக்கமாக பல இடங்களுக்கு சென்று வருவது போட்டோக்களை சோசியல் மீடியாவில் பதிவு செய்வது போன்ற பல செயல்களில் இவர்கள் காதல் வெளிப்பட்டது.
விஜய் டிவியில் நடைபெற்ற பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது. முதலில் அமீர் தன் காதலை பாவனிடம் வெளிப்படுத்தினார். முதலில் பாவனி மறுத்துள்ளார் அதற்குப் பிறகு காதலை பாவனி ஏற்றுக் கொண்டார்.
இவர்கள் இருவரும் அவ்வப்போது வெளியில் சென்று பல அழகான போட்டோக்களை ரசிகர்களுக்கு பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டது போல் உள்ள புகைப்படம் ஒன்று மிக வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த போட்டோவில் அமீர் இஸ்லாமியர் போலவும் பாவனி இந்து பெண்ணாகவும் உள்ளனர். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக வைரலாக பகிரப்பட்டு வருகிறது.