சந்திரமுகி 1 படத்தில் ஜோதிகா சந்திரமுகியாக நடித்திருப்பார் . அந்த வரிசையில் தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிகை கங்கனா சந்திரமுகியாக நடித்துள்ளார். இதில் ராகா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை பி வாசு இயக்கியுள்ளார். பணத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு எம். எம். கீரவாணி இசையமைத்துள்ளார். இப்படத்தில் வடிவேலு மற்றும் ராதிகா மேலும் பல பிரபல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
வரும் செப்டம்பர் 15ஆம் தேதியன்று சந்திரமுகி 2 தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இதை தொடர்ந்து சந்திரமுகி 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் , சந்திரமுகி 2 படத்தில் நடித்திருப்பது எனக்கு மிகவும் பெருமை அளிக்கிறது . இந்த படத்தின் பெரிய பிளஸ்சாக கங்கனா இருந்துள்ளார்.
என்னிடம் அனைவரும் கேட்கப்படும் கேள்வி ஒன்று ஜோதிகா போன்ற கங்கனா நடித்துள்ளாரா ? ஜோதிகாவையும் கங்கனாவையும் ஒப்பிடவே கூடாது ! ஜோதிகா தன்னை சந்திரமுகியாக நினைத்துக் கொண்டார் . சந்திரமுகி எப்படி இருப்பார் என்று நடித்துக் காண்பித்தார் சந்திரமுகி 2 படத்தில் தான் சந்திரமுகி ஒரிஜினல் யாருன்னு காண்பிக்கிறார்கள். அது மட்டும் இன்றி கங்கனா சந்திரமுகி கதாபாத்திரத்தை அவரால் முடிந்த அளவு சிறப்பாக செய்துள்ளார் என்று கூறினார். பின்னர் இப்படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி என்று கூறி உரையை முடித்தார் .