முன்னணி பாடகியாக வலம் வருபவர் சின்மயி . இவர் பல தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்த “கன்னத்தில் முத்தமிட்டால்” என்ற படத்தில் “ ஒரு தெய்வம் தந்த பூவே” என்ற பாடல் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் . இவர் பிறகு பல திரைப்படங்களில் பாடியுள்ளார். அது மட்டும் இன்றி இவர் சமூகப் பிரச்சனைக்காகவும், (Me Too) போன்ற பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்.
இவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது குடும்பத்தில் நூதன முறையில் பணம் மோசடி நடைபெறுவதாகவும். எங்கள் குடும்பத்தில் ஒரு பெரியவரிடம் போலியான TNEB-பில் ஸ்கேம் நடைபெற்றுள்ளது.
OTP பகிரப்படாமலேயே இந்த மோசடி நடைபெற்றுள்ளது என்றும் செல்போனுக்கு வந்த லிங்கை கிளிக் செய்ததும் வங்கி கணக்கில் இருந்து பணம் காணாமல் போய்விட்டது என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அது மட்டும் இன்றி உங்கள் வட்டத்தில் உள்ள ஒவ்வொரு முதியவர்களிடம் இது குறித்து தெரியப்படுத்தி அவர்களை பாதுகாக்கும் அவர் அறிவித்துள்ளார்.