முதன் முதலில் ‘மெட்டி ஒலி’ என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை தீபா . இவர் பல தமிழ் படங்களில் காமெடி காதாபாத்திரத்தில் நடித்துவந்தார் . சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளி வந்த “டாக்டர்” திரைப்படத்தில் காமெடி காதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் சிரிப்பு மலையில் ஆழ்த்தினர் . அதுமட்டுமின்றி கார்த்திக் நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது இதில் நடிகை தீபாவின் நடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்தது .
பின்னர் “குக் வித் கோமாளி’யில் கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் பெற்றார் இந்த நிலையில் சமைக்க தெரிந்த பிரபலங்கள் VS ரசித்து ருசித்து சாப்பிட மட்டும் தெரிந்த பிரபலங்கள் என்ற தலைப்பில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதில் தொகுப்பாளர் ஆவுடையப்பன் காஃபி ஒன்றை குடிக்க சொல்லினார். ஆனால் அதனை குடிக்க தீபா மறுத்த நிலையில், அங்கு இருக்கும் பெசென்ட் ரவி தீபாவின் கழுத்தைப் பிடித்து அந்த காபியை குடிக்க வைத்தார். அப்போது ஐயோ என் கழுத்தை பிடித்து நெறிக்கிறாங்க. என்னை கொலை பண்ண பார்க்குறாரு. நான் ஜீ தமிழ் மேலேயே போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திடுவேன் என்று கதறினார் இந்த வீடியோவானது தற்போது வெளி வந்து சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.