நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தனுஷ்க்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதை தொடர்ந்து இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு இயக்குனரான ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் சில வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து இருவரின் திருமண வாழ்க்கையும் சிறப்பாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.
இதனிடையே இருவரின் விருப்பத்துடன் சட்டபூர்வமாக பிரிவதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர். இந்த அறிவிப்பானது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து குடும்ப நல நீதிமன்றத்தை நாடினர். இருவரிடம் நடத்திய நீண்ட விசாரணைக்கு பிறகு நவம்பர் 21 நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தனர். இதை தொடர்ந்து இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிடம் விவாகரத்தை பற்றி விருப்பம் கேட்டதற்கு இருவருக்குமே விவாகரத்தில் சம்மதம் என்று உறுதி அளித்துள்ளனர். இதை தொடர்ந்து இருவரும் சேர்ந்து வாழ்வதற்கு விருப்பமில்லை என பதில் அளித்துள்ளனர். எனவே வருகின்ற வாரத்தில் இதற்கான இறுதி தீர்ப்பை சென்னை குடும்ப நல நீதிமன்றம் வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.