தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் பெற்ற சங்கர் பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். தற்பொழுது இந்தியன் 2 திரைப்படத்தில் பிஸியாக இருந்து வருகிறார். இயக்குனர் சங்கர் 1996 யில் இந்தியன் முதல் பாகமானது வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியன் முதல் பாகமானது ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. வெளியிடப்பட்டு 28 ஆண்டுகள் கழித்து இந்தியன் இரண்டாம் பாகமானது வெளிவர உள்ளதாகவும் அடுத்த மாதம் 14 – ஆம் தேதி திரையரங்கில் வெளியிடப்படும் என்றும் சினிமா குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியன் 2 திரைப்படத்திற்கான பிரமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இயக்குனர் சங்கர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றை இந்தியன், சிவாஜி மற்றும் முதல்வன் ஆகிய படங்களில் உள்ள ஹீரோக்களை ஒன்று சேர்த்து ஒரே திரைப்படமாக படம் இயக்க யோசனை இருந்ததாகவும் மேலும் இந்த யோசனையை துணை இயக்குனரிடம் கூறியதாகவும் அதற்கு துணை இயக்குனரின் பார்வை இவன் என்ன பைத்தியக்காரனா என்ற மாதிரி இருந்தது மேலும் இந்த ஐடியாவை நான் கைவிட்டு விட்டேன் என்றும் இயக்குனர் சங்கர் பகிர்ந்துள்ளார்.