தமிழ் சினிமாவில் எண்ணற்ற வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் பகத் பாசில் இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வேலைக்காரன் என்ற படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தின் மூலம் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் எண்ணற்ற படங்களின் நடித்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முதல் முறையாக நடிகை நஸ்ரியாவின் கணவர் என அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.
தமிழ் திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்து எண்ணற்ற திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆவேசம் என்ற படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்பொழுது நடிகர் பகத் பாசில் புஷ்பா 2 திரைப்படத்தில் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
பகத் பாசில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்பொழுது அங்கு வருகை தந்த மருத்துவரிடம் ADHD என்ற நோயைப் பற்றி விளக்கத்தை கேட்டார். அந்த நோய்க்கான அறிகுறி என்னவென்றும் எந்த வயதில் குணப்படுத்தலாம் என்றும் பகத் பாசில் கேட்டுள்ளார். அதற்கு அந்த மருத்துவர் சிறுவயதிலே குணப்படுத்த முடியும் என்றும் 41 வயதை கடந்து விட்டால் குணப்படுத்துவது மிகப் கடினம் என்றும் கூறியுள்ளார். இந்த கேள்விக்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் நடிகர் பகத் பாசில்க்கு இது போன்ற நோய் இருப்பதாகவும் செய்திகள் மிக வைரலாக பரவி வருகிறது.