பிரபல இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் கங்கை அமரன், சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிவகங்கையில் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்றபோது, திடீரென உடல் நலப் பிரச்சனை ஏற்பட்டதால், அவர் முதலில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பிறகு கங்கை அமரன் மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக மாற்றம் செய்யப்பட்டார்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு, கங்கை அமரன் தற்போது உடல் நலமாக உள்ளார். அவருக்கு ஏற்பட்ட உடல் சோர்வு காய்ச்சலால் ஏற்பட்டதாகவும், தற்போது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கங்கை அமரன் தமிழ் திரைப்பட உலகில் இசையமைப்பாளர், இயக்குனர், நடிகர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். அவர் இயக்கிய ‘கோழி கூவுது’ உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன.