சூர்யா நடிப்பில் வெளிவந்து கங்குவா திரைப்படம்.
கங்குவா ரிலீசுக்கு முன்பாக இந்திய அளவில் ப்ரமோஷன் பணிகளை பட குழுவினர் நடத்தினர் இந்த படமானது பாஸ்ட் ஆபிஸில் 2000கோடி வசூலிக்கும் என தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவார் என்று சூர்யா ப்ரோமோஷன்களில் பேசியிருந்தார். அதனால் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த கங்குவா. ரசிகர்களிடம் எதிர்மறை விமர்சனங்களை அதிக அளவில் பெற்றது.
ரூபாய் 350 கோடி பட்ஜெட்டில் உருவான கங்குவா படமானது 180 கோடிக்கும் குறைவாகவே வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கங்குவா படமானது அமேசான் பிரைம் ஓடிடியில் வருகிற டிசம்பர் எட்டாம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.