நேற்று இந்தியா – நியூசிலாந்து இடையே நடந்த உலகக்கோப்பை தொடரின் தொலைக்காட்சி நேரலையில் இயக்குனர் கவுதம் மேனன் கலந்து கொண்டார் .
அந்த நேரலையில் ஆர்.கே.பாலாஜியின் நகைச்சுவையான கேள்விகளுக்கு பதில் அளித்த கவுதம் மேனன் . அப்போது கிரிக்கெட்டை மையமாக வைத்து படம் இயக்க வாய்ப்பு உள்ளதா….? என்று கேள்வி கேட்டார் . அதற்கு பதில் அளித்த கவுதம் மேனன் கிரிக்கெட்டை மையமாக கொண்டு புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறேன் , என்றும் அதற்கான கதை எழுதும் பணியை துவங்கியுள்ளேன் என்று பதில் அளித்தார் . மேலும் அந்தக் கதை இரண்டு நண்பர்கள் மாவட்ட அளவிலிருந்து மாநில அளவில் எப்படி கிரிக்கெட்டில் உயர்கிறார்கள் என்பது பற்றி கதை இருக்கும் . அதுமட்டுமின்றி சச்சின் மற்றும் வினோத் காம்ப்ளி இருவரின் நட்பை அடிப்படையாகக் கொண்டு இந்த கதையை தயாரித்து வருகிறேன் என்று கவுதம் மேனன் கூறினார்