இந்திய சினிமாவில் பல முன்னணி நடிகை, நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவது குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த பதிவில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் தீபிகா படுப்போம் இருப்பதாக கூறப்படுகிறது. பிரபலமான நட்சத்திரங்களான ஆலியா பட், கங்கனா ரணாவத் போன்ற நடிகைகளைவிட தீபிகா படுகோன் அதிக சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
அதன்படி சினிமா வட்டாரம் தெரிவித்துள்ள தகவலின் படி தீபிகா படுகோன் ஒரு படத்திற்கு ரூ. 15 கோடி முதல் ரூ. 30 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை போர்பஸ் நிறுவனம் மற்றும் ஐஎம்டிபி நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தென்னிந்தியாவை சேர்ந்த எந்த நடிகைகளும் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் செய்தி வெளியாகி உள்ளது.