இளையராஜாவின் மகள் பவதாரணி புற்று நோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொண்டு வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி பவதாரணி உயிரிழந்தார். இதை தொடர்ந்து பவதாரணையின் உடல் விமான மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. சென்னையில் தியாகராஜ நகரில் உள்ள அவரது வீட்டிற்கு பவதாரணி உடல் கொண்டு செல்லப்பட்டது.
தியாகராஜ நகரில் உள்ள வீட்டில் பவதாரணையின் உடல் அஞ்சலுக்காக வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து திரை பிரபலங்கள், தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். சினிமா துறையில் உள்ள முக்கியமான பிரபலங்கள் விஜய் ஆண்டனி, கார்த்திக், சிம்பு, விஷால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இளையராஜாவின் மகள் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பவதாரணியின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு நேற்று இரவு தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரத்திற்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இளையராஜாவின் அம்மா சின்னத்தாயி மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரின் சமாதிக்கு அருகில் பவதாரணியின் உடலும் அடக்கம் செய்யப்படவுள்ளது.