தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை இலியானா.முதல் முதலில் தமிழில் ‘கேடி’ படம் மூலம் அறிமுகமானார்.பின்னர் தமிழில் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருந்தார்.ஆனால் தனது காதலன் யார் என்பதை அவர் அறிவிக்கவில்லை. “நான் உடையத் தொடங்கும் போது அவர் என்னை தாங்கிப் பிடித்தார். இந்த அன்பான மனிதர் தான் எனக்கு உறுதுணையாக உள்ளார்” என்று மட்டும் இலியானா தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் நடிகை இலியானா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.அதற்கான பேறுகால படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.சமூக வலைத்தளங்களில் அவர் தனது குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.தனது குழந்தையின் பெயரையும் அவர் பதிவிட்டிருந்தார் ‘Koa Phoenix Dola’எங்கள் அன்பு மகன் என்று பதிவிட்டிருந்தார் .
“எங்கள் அன்பு மகனை பூவுலகிற்கு வரவேற்பதில் நாங்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறோம். அதை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என இலியானா தெரிவித்துள்ளார்.இதற்கு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.