நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் இந்தியன் 2 ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்கு பிறகு நாளை இந்தியன் 2 திரைப்படம் வெளியிடப்படுகிறது. 5 வருட கடின உழைப்பிற்கு பிறகு இந்த படம் நாளை திரையரங்கில் வெளியிடப்பட உள்ளது. சங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரித்து உருவாகிய இந்த திரைப்படம் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், மற்றும் ரசிகர்களை கவரும் விதமாக வில்லனாக எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தியன் 2 திரைப்படம் கடந்த மாதம் ஃப்ரீ புக்கிங் துவங்கிய நிலையில் துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ப்ரீ புக்கிங் வசூல் நிலவரம் இதுவரை ரூ. 16 கோடி என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் மட்டும் பிரீ புக்கிங் வசூல் ரூ. 70 லட்சத்தை கடந்துள்ளதாக சினிமா வட்டாரம் தெரிவித்துள்ளது.