ஆர். ஜே. பாலாஜி சென்னை சேர்ந்த வானொலி ஒலிபரப்பாளர். ஆர். ஜே. பாலாஜி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் நடிகராகவும் பங்களிக்கிறார். இவர் தீயா வேலை செய்யணும் குமாரு மற்றும் வடகறி ஆகிய திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார் R.J பாலாஜி LKG படத்தின் மூலம் முழு ஹீரோவானார். இப்படம் தமிழக பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டராக உருவெடுத்துள்ளது. அவர் இயக்குனராக அறிமுகமான படம் மூக்குத்தி அம்மன்.
தற்போது ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள படத்தின் டைட்டில் இணையத்தில் வெளியாக்கியதாக தகவல் வெளிவந்துள்ளது.
நடிகர் சூர்யாவின் 45வது படத்தின் தலைப்பு ‘பேட்டைக்காரன்’ என லீக் ஆகியுள்ளது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் இந்த படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், ஆர்.ஜே. பாலாஜி வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இந்தப் படத்தில் இருந்து விலகிய நிலையில், 20 வயதுடைய சாய் அபயங்கர் புதிய இசையமைப்பாளராக இணைந்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி, கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. படக்குழு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக தலைப்பை அறிவிக்க திட்டமிட்டுள்ளது.